கோவிட் -19 அச்சங்கள் தொடர்பாக நஜிப் அப்துல் ரசாக்கின் முழு சட்டக் குழுவும் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது.
முன்னணி பாதுகாப்பு ஆலோசகர் முகமட் ஷஃபி அப்துல்லா ஒரு கோவிட்-19 நோயாளி ஒருவருடன் நேரடி தொடர்பு கொண்டதால் இது நிகழ்ந்தது.
இதன் விளைவாக, முன்னாள் பிரதமருக்கு எதிரான RM2.28 பில்லியன் 1MDB நிதி முறைகேட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுள்ள நபரருடன் ஷஃபி நெருங்கிய தொடர்பு கொண்டதால் ஷாபியின் வழக்கறிஞர் நூர் ஃபர்ஹா முஸ்தபா கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் சீக்வாராவுக்கு தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று தனது வீட்டில் நடந்த விருந்தின் போது ஷாஃபி அந்த நபருடன் தொடர்பு கொண்டிருந்ததாக நூர் ஃபர்ஹா கூறினார்.