முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், முகிதீன் யாசினுக்கு ஆதரவளிக்க இன்னும் தயாராகவில்லை என்றுள்ளார்.
“இப்போது ஆதரவு சாத்தியமில்லை. முகிதீன் திருடர்கள், துரோகிகள், க்ளெப்டோக்ராட் ஆகியோருடன் நட்பு கொண்டுள்ளார். என்னால் முடியாது. ஆனால் இந்த முறை அவர்கள் மிகவும் பலமாக இருக்கிறார்கள்.
“அரசாங்கத்தை கவிழ்க்க அவர்களுக்கு பலம் உள்ளது. அம்னோ 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. பெர்சத்துவில் சுமார் 30 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்” என்று அவர் சினார் ஹரியானுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அம்னோ தனது ஆதரவை வாபஸ் பெற்றால் பெரிக்காத்தான் கூட்டணி கவிழ்ந்து விடும் என்று மகாதீர் கூறினார்.
நேற்று புத்ராஜெயாவில் ஒரு நேர்காணலில், மகாதீர் புதிய அரசாங்கத்தின் இயக்கத்தை கண்காணிப்பதாகவும் கூறினார்.