லிம் குவான் எங் ஒரு “மலாய் எதிர்ப்பாளர்” இல்லை – மகாதீர்

நிதி அமைச்சராக இருந்த லிம் குவான் எங் ஒரு “மலாய் எதிர்ப்பாளர்” என்று ஒருபோதும் காட்டவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

“மலாய் அரசாங்கத்திற்கான” ஒரு பிரச்சாரத்தை அறிந்திருந்தார் மகாதீர். அது அவரை லிம்மின் கட்டைவிரலின் கீழ் இருப்பதாக சித்தரித்தது.

“மலாய் அரசாங்கத்தை நிறுவ ஒரு பிரச்சாரம் நடந்தது எனக்குத் தெரியும். அவர்கள், நான், லிம் குவான் எங் கட்டளைகளின் கீழ் உள்ளதாக என்னை சித்தரித்தார்கள்”.

“அது பலரால் நம்பப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையிலேயே, லிம் குவான் எங் அரசாங்கத்தில் இருந்தபோது, அந்த நேரத்தில் அவர் நிதியமைச்சராக பணியாற்றினார். அப்போது என் விருப்பத்திற்கும் கட்டளைக்கும் தான் அவர் இணங்க வேண்டியிருந்தது” என்ற உண்மையை மகாதீர் விளக்கினார்.

“குவான் எங் ஒரு மலாய் எதிர்ப்பாளார் என்று ஒன்றும் தெரியவில்லை,” என்று மகாதீர் இன்று வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில் கூறினார்.

லிம், டி.ஏ.பி. கட்சியின் பொதுச்செயலாளர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான், பாரிசானைத் தோற்கடித்த பின்னர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எனினும் பின்னர் எதிர்க்கட்சிகளான – பாரிசான் மற்றும் பாஸ் – அவரின் நியமனம் குறித்து அரசாங்கத்திற்கு எதிராக விமர்சித்தனர். மலாய்க்காரர் அல்லாதாருக்கு நிதி அமைச்சர் பதவி கொடுத்ததை அவர்கள் ஏற்கவில்லை.

அட்டர்னி ஜெனரல் டாமி தாமஸின் நியமனத்திற்கும் இதே உணர்வு இருந்தது.

சீனர்களுக்கு கொடுக்கவே வேண்டாம்

நிதி அமைச்சகத்தை நிர்வகிக்கும் போது சீன சமூகத்தை லிம் வளர்க்கவில்லை என்று மகாதீர் கூறினார்.

எதிர்மறையான கருத்துக்களைத் தவிர்ப்பதற்காக, எந்தவொரு புதிய கொள்கைகளையும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அல்லது 2020 வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் முன்பு லிம் தன்னையும் (மகாதீர்) பிற ஆலோசகர்களையும் கலந்தாலோசித்ததாக மகாதீர் கூறினார்.

“2020 பட்ஜெட்டில் உட்பட்ட குவான் எங் அறிமுகப்படுத்திய புதிய கொள்கைகள் அனைத்தும் என் முன்வைக்கப்பட்டன. நானும் எனது ஆலோசகர்களும் ஆராய்வோம். டி.ஏ.பி.க்கு ஆதரவாக இருந்தால், நாங்கள் அதை ஏற்க மாட்டோம்” என்று மகாதீர் கூறினார்.

திரங்கானு மாநிலத்திற்கு RM400 மில்லியன், கெடா மற்றும் கிளந்தான் மாநிலங்களுக்கு முறையே RM200 மில்லியன் நிதி உதவியையும் லிம் வழங்கினார் என்று மகாதீர் கூறினார்.

“இந்த மாநில அரசுகள் PH-ன் கீழ் இல்லை. அனைத்தும் மலாய்க்காரர்கள். மலாய்க்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாம் கேட்க லிம் நிறையவே தந்தார்” என்று அவர் கூறினார்.

அப்போதைய அரசாங்கம், சீன மக்களுக்கு சில பங்களிப்பை மறுக்காமல், மலாய்காரர்களுக்கு அதிகமான உதவியை வழங்கியது.

இருப்பினும், சில தரப்பினர்களுக்கு இந்த விநியோகத்தில் உடன்பாடில்லை.

“நாம் மலாய்காரர்களுக்கு RM1 பில்லியன் வழங்கும் போது, சீன மக்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட் அல்லது பத்தில் ஒரு பங்கு கொடுக்க முடியாதா?

“ஆனால் சீனர்களுக்கு ஒன்றுமே கொடுக்க கூடாது என்ற நபர்களும் நிறைய உள்ளனர். அது சரியில்லை. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அவர் கூறினார்.

எனவே தான், பெர்சத்துவின் உச்ச கவுன்சிலுடனான சந்திப்பின் (Majlis Pimpinan Tertinggi Bersatu) போது தான் தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக மகாதீர் கூறினார்.