காடெக் சட்டமன்ற உறுப்பினர் ஜி. சாமிநாதன் டி.ஏ.பி. கட்சியை விட்டு வெளியேறி மலாக்கா மாநில பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் சேருவார் என்று வெளியாகியுள்ள வதந்திகளை மறுத்துள்ளார் அவரின் மனைவி.
“போலி செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்”.
“ஒரு மனைவியாக, நான் அவரை நன்கு அறிவேன். என்னவானாலும் அவர் தன் நிலைபாட்டிலிருந்து மாற மாட்டார்” என்று வி.உமா தேவி இன்று ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
மலேசியாகினி விளக்கத்திற்காக சாமிநாதனை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.
தி ஸ்டாரின் போர்டல், காடெக் சட்டமன்ற உறுப்பினர் பெரிக்காத்தான் நேசனலில் சேரத் தயாராக இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிவித்தது.
நேற்று (மார்ச் 12) மலாக்கா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தொடர்பான அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலிருந்தும் சாமிநாதன் வெளியேறியதாக ஒரு மலாக்கா டிஏபி சட்டமன்ற உறுப்பினரின் ஆதாரத்தை மேற்கோள் காட்டி அறிக்கை மேற்கோளிட்டுள்ளது.
கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்துடன் (எல்.டி.டி.இ) தொடர்புடைய 12 கைதிகளில் சாமிநாதனும் ஒருவர்.
பெரிக்காத்தான் கூட்டணியை ஆதரித்து மாநில அரசாங்கத்தை அமைப்பதில் மலாக்கா மாநில செயற்குழுவில் (எக்ஸோ) 10 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக மலாக்கா மந்திரி புசார் சுலைமான் அலி இன்று அறிவித்தார். ஒரு டிஏபி சட்டமன்ற உறுப்பினரும் மற்றொரு பி.கே.ஆர் உறுப்பினரும் தங்கள் கட்சியிலிருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேசனலுக்கு ஆதரவளித்ததை தொடர்ந்து இந்த நிலை வந்துள்ளது.