RON95, 7 சென் குறைந்தது , RON97, 9 சென் குறைந்தது

RON95, 7 சென் குறைந்தது , RON97, 9 சென் குறைந்தது.

RON95 பெட்ரோலின் சில்லறை விலை இன்று இரவு நள்ளிரவில் இருந்து ஒரு லிட்டருக்கு 7 சென் குறைந்து லிட்டருக்கு RM1.82 ஆக குறைந்தது.

RON97, 9 காசுகளை குறைந்து, லிட்டருக்கு RM2.10ஆக குறைந்தது என்று நிதி அமைச்சு (MOF) இன்று ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது.

டீசல் சில்லறை விலையும் ஒரு லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து RM1.87 ஆகியுள்ளது.
இது தானியங்கி விலை நிர்ணய முறையைப் (Automatic Pricing Mechanism (APM)) பயன்படுத்தி பெட்ரோலிய பொருட்களின் வாராந்திர சில்லறை விலையை அடிப்படையாகக் கொண்டது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் தற்போது உலகின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களிடையே தவறான புரிதலாலும், உலகப் பொருளாதாரத்தை பாதித்துள்ள கோவிட்-19 பாதிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கு குறிப்பாக விலைவாசியினால் உயரும் வாழ்க்கைச் செலவைக் கையாள்வதில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.