கோவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி பங்கேற்பாளர்களின் தகவல்கள் தேவை – காவல்துறை வேண்டுகோள்

கோவிட்-19: பங்கேற்பாளரின் தகவல்களை வெளியிடுமாறு காவல்துறை மக்களைக் கேட்டுக்கிறார்கள்.

பிப்ரவரி 28 அன்று கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களைப் பற்றிய தகவல்களைக் கொண்ட பொது மக்கள், சுகாதார அமைச்சகத்திற்கு அத்தகவல்களைக் பகிர்ந்து கொள்ளுமாரு கேட்டுக்கொள்ளப்பட்டனர். கோவிட்-19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க இது பெரிது உதவும் என்று நம்பப்படுகிறது.

தற்போது மசூதி வாரிய உறுப்பினர்களில் சுமார் 1,500 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமன் பாதுகாப்புத் துறை இயக்குநர் அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

“அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்களை அறிந்தவர்கள் முன் வந்து தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

“இன்றுவரை, சம்பந்தப்பட்ட பங்கேற்பாளர்களை அடையாளம் காண உதவுவதற்காக சுகாதார அமைச்சு, காவல்துறையின் உதவியை நாட தொடர்பு கொள்ளவில்லை” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

கோவிட்-19 சோதனைக்காக பங்கேற்பாளர்களை தாங்களாகவே முன்வருமாறு மட்டுமே அவர்கள் ஆலோசனை வழங்க முடியும் என்றார்.

அந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியாற்றிய காவல் அதிகாரிகளும் அடையாளம் கண்டு சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 சுகாதார பரிசோதனைக்கு சில பங்கேற்பாளர்களும் முன்வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 12ம் தேதி மசூதியில் நடைபெற்ற ஒரு பேரணியைத் தொடர்ந்து கிருமி நீக்கம் செய்ய அனுமதிக்க மசூதி தற்காலிகமாக மூடப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு (WHO) முன்னதாக கோவிட்-19ஐ ஒரு தொற்றுநோயாக (pandemic) அறிவித்தது, அதாவது நோய் பாதிப்பு உலகம் முழுவதும் வெகுவேகமாக பரவியுள்ளது.