கோவிட்-19: மார்ச் 13 வரை 33 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்

கோவிட்-19: மார்ச் 13 வரை 33 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

மலேசியாவின் கோவிட்-19 பாதிப்புகளில் நேற்று (மார்ச் 13) நிலவரப்படி, முப்பத்து மூன்று நபர்கள் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை மஸ்ஜித் ஜமேக் ஸ்ரீ பெட்டாலிங்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு இப்போது நோயின் அறிகுறிகளுடன் உள்ள பங்கேற்பாளர்களை வெள்ளிக்கிழமை தொழுகை உள்ளிட்ட எந்த ஒரு தொழுகைகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆரோக்கியம் அடைந்த பின்னரே அவர்களை எந்த ஒரு தொழுகைகளிலும் கலந்து கொள்ளுமாறு தனது உத்தியோகபூர்வ ட்விட்டரில் ஒரு பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

வளாகத்தின் தூய்மையை உறுதிப்படுத்த மசூதிகள் மற்றும் சூராவ் நிர்வாகத்தை தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் நூர் ஹிஷாம்

மசூதிகள் மற்றும் சூராவின் கம்பளம், கதவுகள் மற்றும் தூண்களை அவர்கள் சோப்பு மற்றும் கிருமிநாசினியைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது, என்றார்.