உடைகளைப் பற்றி பேசாமல், ஊதியம் இல்லாமல் இருக்கும் 13,000 MAS ஊழியர்களுக்கு உதவுங்கள்

உடைகளைப் பற்றி பேசாமல், ஊதியம் இல்லாமல் இருக்கும் 13,000 MAS ஊழியர்களுக்கு உதவுங்கள்.

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பெர்சத்து இளைஞர் தலைவர் சையத் சதிக் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.

முன்னதாக, இஸ்லாமிய விமான பணிப்பெண்களுக்கான உடலை முழுமையாக மறைக்கும் உடைகளை பரிந்துரைக்கும் கொள்கை குறித்து விவாதிக்க பெண்கள் மற்றும் குடும்ப நல துணை அமைச்சர் சிட்டி ஜைலா முகமட் யூசோஃப், பிரதமர் துறையின் சுல்கிப்லி முகமட்டை சந்தித்து பேசுவதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறுத்து கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் சையத் சதிக் அப்துல் ரஹ்மான் இவ்வாறு கூறியுள்ளார்.

“கொரோனா வைரஸ் பாதிப்பால் 13,000 மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஊதியம் பெறாமல் விடுப்பு எடுக்க வேண்டுயுள்ளது. தயவுசெய்து முதலில் இந்த சிக்கலை தீர்க்க அவர்களுக்கு உதவுங்கள் YB. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள்” என்று சையத் சாதிக் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பாதிப்பை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட நாடுகளின் பயணக் கட்டுப்பாடு காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.