ஒரு மாதத்திற்கு பள்ளியை மூடுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கேட்டுக்கொள்கிறார்

முன்னாள் துணை சுகாதார மந்திரி டாக்டர் லீ பூன் சாய், கோவிட்-19 விளைவின் தீவிரத்தை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

நேற்று ஒரு பேஸ்புக் பதிவில், தற்போதைய பாதிப்புகள் மற்றும் நெருங்கிய தொடர்புகள் கண்டறியப்படுவதற்கும் தனிமைப்படுத்தப்படுவதற்கும் முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாகக் கூறினார்.

“பாதிப்புகள் மற்றும் நெருங்கிய தொடர்புகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளன. அவற்றை எல்லாம் கண்டறிந்து தனிமைப்படுத்துவது சுகாதார அமைச்சகத்திற்கு (MOH) சாத்தியமில்லை.

“எனவே, இனி தடுப்பதற்கு சாத்தியமில்லை” என்று அவர் கூறினார்.

“நாம் இனி, பாதிப்புகளின் எண்ணிக்கையை தணித்தல், குறைத்தல் மற்றும் சுகாதார வளங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தொற்றுநோயை சமாளிக்க அமைச்சு அதிக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நேற்று மலேசியாவில் 190 பாதிப்புகள் அதிகரித்து மொத்தம் 428 பதிவாகியதை அடுத்து லீயின் அறிக்கை வந்துள்ளது.

பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை கோலாலம்பூரில் உள்ள செரி பெட்டாலிங் மசூதியில் நடந்த தப்லிக் கூட்டத்துடன் பெரும்பாலான புதிய பாதிப்புகள் இணைக்கப்பட்டன. இதில் சுமார் 14,500 மலேசியர்கள் கலந்து கொண்டனர்.
“விசாரணையில் உள்ள நோயாளிகள் (PUI) கோவிட்-19 வரை ஹோட்டல் அல்லது தங்குமிடங்கள் போன்ற சிறப்பு தனிமை வசதிகளில் வைக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அதோடு, கல்வி நிறுவனன்களின் வளாகத்தை ஒரு மாதத்திற்கு மூடுமாறும் அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

“பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், மழலையர் பள்ளிகள் ஆகியவை ஒரு மாதத்திற்கு மூடப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

“அனைத்து மத, சமூக, விளையாட்டு நடவடிக்கைகள் உட்பட ஒரு மாதத்திற்கு சபைகூடல், பேரணிகளை நிறுத்துங்கள்” என்று லீ மேலும் கூறினார்.

வடக்கு பகுதியில் கோடை காலம் அல்லது முறையான சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்படும் வரை பாதிப்பை மோசமாக்குவதை தாமதப்படுத்துவது அல்லது தடுப்பதே கட்டுப்பாட்டின் நோக்கம் என்று அவர் கூறினார்.
நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் கூட ஆகும் என்று அவர் கூறினார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான கூடுதல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரசாங்கம் இன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளது.