125 புதிய பாதிப்புகள், 12 பேர் தீவிர சிகிச்சை
கோவிட்-19 இன் 125 புதிய பாதிப்புகள் குறித்து இன்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தகவல் அளித்துள்ளார். இந்த எண்ணிக்கை மலேசியாவில் மொத்த பாதிப்புகளை 553 உயர்த்தியுள்ளது.
இதற்கிடையில், 12 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருக்கின்றனர் என்றும் அவர்களுக்கு சுவாசக் கருவி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
125 புதிய பாதிப்புகளில், 95 பாதிப்புகள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் உள்ள தப்லீக் கூட்டம் தொடர்பானவை என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய முன்னேற்றங்களின்படி, ஐ.சி.யுவில் சுவாச உதவி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நேற்று ஆறில் இருந்து இன்று 12 ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது.
நேற்று, மொத்த கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. 190 புதிய பாதிப்புகளைக் கொண்டு, இப்போது மொத்தம் 428-ஆக அதிகரித்துள்ளன.