டாக்டர் சுல்கிப்லி: பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஒரு ஒட்டுமொத்த நடமாட்ட தடை உத்தரவு அல்ல

டாக்டர் சுல்கிப்லி: பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஒரு ஒட்டுமொத்த நடமாட்ட தடை உத்தரவு அல்ல.

கோவிட்-19ஐ சமாளிக்க பிரதமர் மகிதீன் யாசின் அறிவித்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஒரு ஒட்டுமொத்த நடமாட்ட தடை உத்தரவு அல்ல. ஆனால் இது ‘தொற்று பரவலை குறைப்பதன் மூலம் பாதிப்புகளின்
எண்ணிக்கையை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமூக தனிமைப்படுத்தலாகும்’ என்று கூறியுள்ளார்.

“இது ஊரடங்கு உத்தரவு அல்லது முழுமையான பொது நடமாட்ட தடை (lockdown) அல்ல. முழுமையான தட உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நீங்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது; உணவு வாங்க வெளியே கூட செல்ல முடியாது,” என்று அவர் கூறினார்.

பிரதமரின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக மலேசியாகினியில் டாக்டர் சுல்கிப்லி இதனைத் தெரிவித்தார்.

“சமூக நடவடிக்கைகளைத் தவிர்ப்பதே சிறந்த செயல். இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்றாலும், இறுதி இலக்கு தொற்றுநோய் பரவலைக் குறைப்பதாகும்” என்று அவர் கூறினார்.

கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மார்ச் 18 புதன்கிழமை முதல் மார்ச் 31 வரை அரசாங்கம் பொது நடமாட்டத்தை மட்டுப்படுத்தும் என்றும் முகிதீன் அறிவித்தார். பள்ளிகள், உயர்கல்விக்கூடங்கள், மற்றும் தனியார் பணி வளாகங்களை மூடுவது இவற்றில் அடங்கும்.

இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பேரங்காடிகள், பொதுச் சந்தைகள், சில்லறைக் கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை விற்கும் கடைகள் ஆகியவை பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.

கோவிட்-19ஐ கட்டுப்படுத்த பல நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன, குறிப்பாக சீனா, கிருமி பரவுவதில் சரிவைக் காட்டுகிறது என்று முகிதின், தனது உரையில் கூறினார்.

எவ்வாறாயினும், சீனாவிலோ அல்லது இத்தாலியிலோ வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் போல இல்லாமல், இது முறையான ஆலோசனையின்றி செய்யப்பட்டுள்ளது, என்றும் சுல்கிப்லி கூறினார்.

“சிலாங்கூரின் கோவிட்-19 சிறப்பு பணிக்குழுவின் தலைவராக, இந்த முயற்சிகள் அனைத்தையும் நான் வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன். இது சமூக நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப உள்ளது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, சமூக நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை சுல்கிப்லி முன்மொழிந்திருந்தார். அத்தியாவசிய சேவைகள் அல்லது மருத்துவ மையங்களுக்கான செல்வதைத் தவிர, வீட்டை விட்டு வெளியேறாதவாறு மக்களை கட்டுப்படுத்த் வேண்டும் என்று கூறியிருந்தார்.