கோவிட்-19: தொழிலாளர் வர்க்கத்திற்கு நாளை என்ன நடக்கும்?

கோவிட்-19: தொழிலாளர் வர்க்கத்திற்கு நாளை என்ன நடக்கும்?

நேற்று இரவு அறிவிக்கப்பட்ட இரண்டு வார பொது நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை கோவிட்-19 பாதிப்பை தடுப்பதற்கான முயற்சியாகும்.

ஆனால் அதே நேரத்தில் அது தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

மார்ச் 18-ல் இருந்து அமல்படுத்தப்படும் இந்த உத்தரவில் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்களும் மூடப்படும். பெரும்பாலான பணி இடங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன.

“வனிகர்களின் வருமானத்திற்கும் அவர்களின் ஊழியர்களின் சம்பளத்திற்கும் என்ன செய்யப் போகிறார்கள்? இது அரசாங்கத்தால் ஏற்கப்படுமா?” என்று முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் கேட்டுள்ளார்.

மலேசியாகினியைத் தொடர்பு கொண்ட தனியார் துறையில் உள்ள சில தொழிலாளர்கள், தங்கள் நிறுவனம் தங்களை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிட்டதாகக் கூறினார்.

இருப்பினும், எல்லா வேலைகளுக்கும் அத்தகைய தன்மை இல்லை.

கோவிட்-19 இன் பாதிப்பு சுற்றுலா மற்றும் விமானத் துறை தொழிலாளர்களை பாதித்தது. பலர் ஊதியம் பெறாத விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

ஊதியம் பெறாத விடுப்பில் இருக்கும் RM4,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு RM600 விகிதம், ஆறு மாதங்களுக்கு செலுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இருப்பினும், இந்த அறிவிப்பு சுமார் 33,000 தொழிலாளர்களுக்கு RM120 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இத்திட்டத்தை அரசாங்கம் எவ்வாறு விரிவுப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இச்செலவை அரசாங்கம் ஈடுகொள்ள முடியுமா?

பொது நடமாட்டக் கட்டுப்பாடு, தினசரி வருமானம் ஈட்டுபவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா யோவும் கவலை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகளில் சேர்க்கப்படாத அனைத்து அலுவலகங்களையும் மூடுவதோடு மட்டுமல்லாமல், இக்கட்டுப்பாட்டு உத்தரவு, மக்கள் மலேசியாவை விட்டு வெளியேறவும் தடை விதித்துள்ளது.

இது சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய குடிமக்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்களில் சுமார் 300,000 தொழிலாளர்கள் வரை இருக்கும் என்று லிம் மதிப்பிடுகிறார்.

ஜோகூரில் உள்ள பரித் யானி சட்டமன்ற உறுப்பினர் அமினோல்ஹுதா ஹசான், இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

“அரசாங்கம் சிங்கப்பூர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா?” என்று கேட்டார்.

ஜொகூர் மக்களுக்கு சிறந்த தீர்வைக் காண விவாதங்கள் நடத்தப்படும் என்று ஜோகூர் அமைச்சர் ஹஸ்னி முகமது மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் சான் சுன் சிங், தடையால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் தங்கள் வணிக தொடர்ச்சிக்கான ஒரு மறு ஆதரவு திட்டத்தை கொண்டு வர வேண்டியிருக்கும் என்றார்.

“சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே தினசரி பயணம் செய்யும் மலேசிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள வணிகங்கள், தங்கள் வணிக தொடர்ச்சிக்கு ஒரு மறு ஆதரவு திட்டத்தை கொண்டு வர வேண்டும்”.

“அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்களுக்கு உதவ தயாராக இருக்கும் பொருளாதார நிறுவனத்தை (சிங்கப்பூரில்) தொடர்பு கொள்ள வேண்டும்” என்று நேற்று இரவு பேஸ்புக்கில் அவர் கூறினார்.

சிங்கப்பூர் புத்ராஜயாவுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும், சிங்கப்பூரின் மக்களும் வணிகங்களும் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதே அவர்களின் முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.

தேசிய பாதுகாப்பு மையம் (எம்.கே.என்)/Majlis Keselamatan Negara (MKN) இன்று நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர் சேவை தொலைபேசி தொடர்பும் இன்று நண்பகல் முதல் செயல்படுத்தப்படும்.