மலேசியர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்கள் நாளை முதல் மார்ச் 31 வரை செய்ய இயலாது என்று குடிவரவு இயக்குநர் ஜெனரல் கைருல் டிசைமி டாவூட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்த பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு, மலேசியர்களை வெளிநாட்டிற்கு செல்ல தடைசெய்துள்ளது.
“நாளை முதல் மார்ச் 31 வரை இது அனுமதிக்கப்படாது” என்று கைருல் மலேசியாகினியிடம் வாட்ஸ்அப் வழியாக கூறினார்.
ஜொகூரில் வசித்து சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசியர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் சுகாதார சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
நீர், மின்சாரம், எரிசக்தி, தொலைத்தொடர்பு, அஞ்சல், போக்குவரத்து, நீர்ப்பாசனம், எண்ணெய், எரிவாயு, எரிபொருள், மசகு எண்ணெய், ஒளிபரப்பு, நிதி, வங்கி, சுகாதாரம், மருந்தகம், தீயணைப்பு, சிறைச்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு, துப்புரவு, சில்லறை தொழில் மற்றும் உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளைத் தவிர, அரசு மற்றும் தனியார் வளாகங்களும் நிறுவனங்களும் நாளை மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..