கோவிட்-19 கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் அழைக்கப்படவில்லை

பிரதமர் முகிதீன் யாசின் தலைமையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான நடபாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு குறித்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள பல மாநில தலைவர்கள் அழைக்கப்படாதது குறித்து பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) வருத்தம் தெரிவித்துள்ளது.

கூட்டத்திற்கான அழைப்பு சிலாங்கூர், கெடா, நெகிரி செம்பிலன், சபா மற்றும் பினாங்கில் உள்ள அமைச்சர்களுக்கும் மந்திரி புசாருக்கும் நீட்டிக்கப்படவில்லை என்று தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பி.எச். பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

“புத்ராஜெயா அமைச்சர்களை அழைக்காதது குறித்து பி.எச். முகவும் வருத்தத்தை பதிவு செய்கிறது”.
“தற்போதைய மத்திய அரசுடன் ஒத்துப்போகாத மாநில அரசாங்கங்களை அவர்கள் (அமைச்சர்கள்) நிர்வகிப்பதால் தான் என்றால், இந்த குறுகிய சிந்தனையுள்ள நடவடிக்கை மக்களுக்கு தான் தீங்கு விளைவிக்கும்” என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தை மாநிலத்தின் மக்கள்தொகை அமைப்பு கொண்டுள்ளது என்றும், அந்த மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

“எனவே, மாநிலங்களின் குடிமக்களின் பாதுகாப்பிற்காக, அமைச்சர்கள் மற்றும் மாநில தலைவர்களுடன் உடனடியாக ஒரு கூட்டத்தை நடத்துமாறு பி.எச் பொதுச்செயலாளர் புத்ராஜயாவை வலியுறுத்தியுள்ளார்,” என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் முகிதீன் யாசின் சமீபத்தில் தனது சிறப்புக் கூட்டத்தின் சில படங்களை தனது பேஸ்புக்கில் வெளியிட்டார்.

இது அழைக்கப்படாத சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷரியின் கவனத்தைப் பெற்றது. கோவிட்-19 பாதிப்பால் சிலாங்கூர் தான் அதிகம் பாதிக்கப்பட்டது என்று கூறினார்.

கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதீரும் அமிருதின் பதிவுக்கு பதிலளித்தார்:

“கெடாவும் அழைக்கப்படவில்லை. கெடாவில் கோவிட்-19 இல்லை போல் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

பி.கே.ஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பட்ஸிலும் ட்விட்டரில் தனது பதிவின் மூலம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்:

“தலைமைத்துவத்தை கொஞ்சம் காட்டுங்கள்!” என்று எழுதியிருந்தார்.