ஒழுங்கை புறக்கணித்தால் ‘சுனாமி போன்ற மூன்றாம் அலை’

மலேசியர்கள் ஒழுங்கை புறக்கணித்தால் ‘சுனாமி போன்ற மூன்றாம் அலையை’ எதிர்நோக்கக் கூடும் என்று சுகாதார ஆணையர் எச்சரிக்கிறார்.

பொதுமக்கள் வீட்டிலேயே தங்கி நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு செய்யத் தவறினால், கோவிட்-19 பாதிப்பு மோசமடையக்கூடும் என்று சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

“தயவுசெய்து இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு நான் அனைத்து மலேசியர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன். வீட்டிலேயே இருங்கள், வெளியே செல்ல வேண்டாம்” என்று டாக்டர் நூர் ஹிஷாம் பேஸ்புக்கில் எழுதினார்.

நாடு முழுவதும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் சக்தி இப்போது மலேசியாவுக்கு சிறிதளவு வாய்ப்பு உள்ளது.

“ஒவ்வொரு நபரும் தனது சுய நலனுக்காகவும், குடும்பத்தின் நலன்களுக்காகவும், ஒவ்வொரு அடியையும் எடுப்பதற்கு பொறுப்பேற்பதால், உங்கள் பங்கைச் செய்து MOH-க்கு உதவுங்கள்” என்று அவர் கூறினார்.

அபாயகரமான கோவிட்-19 பாதிப்பின் பரவலானது இரண்டு மலேசியர்களின் உயிரைக் கொன்று இதுவரை 600க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது.

அரசாங்கம் ஒரு பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இது பொதுமக்கள் கூடிவதைத் தடுக்கும் முயற்சியில் பெரும்பாலான வணிகங்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோவிட்-19 பரவுவதை மெதுவாக்குகிறது.