பொது நடமாட்ட கட்டுப்பாட்டின் முதல் நாள்

கோவிட் -19 பரவலை தடுப்பதற்காக, இன்று தொடங்கிய பொது நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவின் முதல் நாளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.

இருப்பினும், இந்த உத்தரவை மதிக்காதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அதிகாரிகள் வழிநடத்த வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களை தங்கள் உணவகங்களில் உணவருந்த அனுமதிக்கும் பல உணவகங்களும், தொடர்ந்து செயல்படும் சில உழவர் சந்தைகளும் இதில் அடங்கும்.

கோலா லங்காட் உழவர் சந்தை இயக்குவதை நிறுத்த அதிகாரிகள் கட்டுப்படுத்துகின்றனர். வாகனத்தில் இருந்த அதிகாரி ஒரு ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி விற்பனையாளர்களை விற்பனையை நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

நடமாட்ட கட்டுப்பாட்டின் கீழ், விவசாயி சந்தை, இரவு சந்தை மற்றும் பிற சந்தைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. பொது சந்தை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

உள்ளமர்ந்து சாப்பிட வாடிக்கையாளர்களைப் பெற உணவகங்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் (take-outs) மற்றும் விநியோக சேவைகளுக்கு (delivery) மட்டுமே உணவை விற்க முடியும்.
இன்று வழக்கம் போல் இயங்கும் சில வர்த்தகர்கள், நடமாட்ட கட்டுப்பாடு தெளிவாக இல்லை என்று கூறினர்.

புடு சந்தை

புடு சந்தையில் 70 சதவீத வணிகர்கள் இன்றும் வழக்கம் போல் செயல்பட்டு வந்தனர். இந்த உத்தரவு குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

“எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. அதைப் பற்றி இன்று தான் எங்களுக்குத் தெரியும்,” என்று ஒரு வணிகர் கூறினார்.

உத்தரவின் படி, இன்று முதல் மார்ச் 31 வரை, அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து வகையான வணிகங்களும் சேவைகளும் மூடப்பட வேண்டும்.

கெடாவின் சுங்கை பட்டானியில், ஒரு காபி கடை உரிமையாளர் தனது வாடிக்கையாளர்களை தனது கடையில் சாப்பிட மற்றும் தேனீர் குடிக்க அனுமதித்ததாக கூறப்படுகிறது.

சுபாங் ஜெயாவில், எஸ்எஸ் 15 சந்தைக்கு அருகிலுள்ள ஒரு உணவகம் வாடிக்கையாளர்களுக்கு வழக்கம்போல தொடர்ந்து சேவை செய்து வருவதாக மலாய் மெயில் அறிக்கை கூறுகிறது.

அங்குள்ள தொழிலாளர்களில் ஒருவர் தனது முதலாளியிடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கூறினார்.
சரவாக்கிலுள்ள மிரியில், வாடிக்கையாளர்கள், பெரும்பாலும் வயதானவர்கள், காலை உணவுக்காக காபி கடைகளில் வழக்கம் போல் கூடுவதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், பிற வணிகங்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள சோதனைகளில், உணவகங்கள், வீட்டிற்கு எடுத்து செல்லக்கூடிய உணவுகளை மட்டுமே வழங்குவதாக அறிவிப்புகளை மாட்டியிருப்பது காணப்பட்டது.

உணவு தயாராகும் வரை காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வசதியான தூரத்தில் இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சாப்பாட்டு அறையை மூடிய உணவகங்களும், தங்கள் கடைகளில் நாற்காலிகளை வைக்காத உணவகங்களும் இருந்தன.

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவுகள் பரபரப்பான நகரமாக கிள்ளான் பள்ளத்தாக்கை “பேய் நகரங்களாக” மாற்றியுள்ளன. பெரும்பாலான வணிக நடவடிக்கைகள் நிறுத்த பட்டுள்ளன, மக்களும் வீட்டை விட்டு வெளியேறவில்லை.