கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து சுமையை குறைக்க உதவும் வகையில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை மின்சார கட்டண குறைப்பை வழங்க அரசாங்கம் விரும்புகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு (6) வணிகத் துறைகளுக்கு இந்த காலகட்டத்தில் 15 சதவீத குறைப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் ஷம்சுல் அனுவர் நசரா தெரிவித்தார். சம்பந்தப்பட்ட துறைகள் : 1. தங்கும் விடுதி (ஹோட்டல்); 2. பயண மற்றும் சுற்றுலா முகவர்; 3. பேரங்காடி; 4. மாநாட்டு மையம்; 5. பொழுதுபோக்கு பூங்கா (தீம் பார்க்); 6. உள்ளூர் விமான நிறுவனங்கள்.
அதோடு, வணிக, தொழில்துறை மற்றும் விவசாய உபயோகர்கள், 2 சதவீத தள்ளுபடியை அனுபவிப்பார்கள் என்றார்.
குடியிருப்பு பிரிவில் உள்ள உபயோகர்களும் இந்த காலகட்டத்தில் மின்சார பயன்பாட்டிற்கு 2 சதவீத தள்ளுபடியை பெறுவதன் மூலம் மின்சார கட்டண சேமிப்பை அனுபவிப்பார்கள்.
தள்ளுபடி செலவை தீபகற்பத்திற்கான மின்சார தொழில் நிதியம் (Kumpulan Wang Industri Elektrik bagi Semenanjung) மூலம் அரசாங்கத்தால் ஈடுகட்டப்படும் என்றும், சபா மற்றும் சரவாக் ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கும் என்றும் அவர் கூறினார்.