கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்தால் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் உதவ வேண்டும்

கொரோனா வைரஸ் | நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில் கடும் அதிகரிப்பு இருந்தால், ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த மருத்துவ அதிகாரிகளை பணியமர்த்த அரசாங்கம் தயாராக உள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா, அவர்களின் சேவைகளுக்கு ஒரு முக்கிய தேவை இருந்தால் மட்டுமே இதுபோன்ற முடிவு எடுக்கப்படும் என்றார்.

“சில நாடுகளைப் போலவே கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையில் வெகுவான உயர்வு இருந்தால், எங்களுக்கு உதவுவதற்காக அவர்களை (ஓய்வு பெற்ற மற்றும் ஆயுதப்படை மருத்துவர்கள்) கேட்டுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 நிலைமையைச் சமாளிக்க மற்றும் சுகாதார தொடர்பான பிற விஷயங்களை சமாளிக்கவும் தற்போது நாட்டில் போதுமான மருத்துவர்கள் உள்ளனர் என்றும், டாக்டர் ஆதாம் கூறினார்.

தற்போதுள்ள மருத்துவர்களின் சுமைகளை இலகுவாக்கும் வகையில், தினசரி நடவடிக்கைகளை கவனிக்க நாடு முழுவதும் 44 மருத்துவமனைகளில் 1,000 பயிற்சி மருத்துவர்களை பணியமர்த்துவதற்கான அமைச்சின் முயற்சிகள் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் முதல் கோவிட்-19 பாதிப்புகள் கடுமையாக அதிகரிப்பை கையாளும் வகையில் நாடு முழுவதும் 135 அரசு மருத்துவமனைகளில் மேலும் 830 செவிலியர்களை அமைச்சகம் சேர்த்துள்ளது.

இதற்கிடையில், கோவிட்-19க்கான தடுப்பூசியை உருவாக்கும் திறன் கொண்ட நாடுகளில் மலேசியாவும் இருக்கக்கூடும் என்று ஆதாம் நம்பிக்கை கொண்டுள்ளார். இது எதிர்காலத்தில் மலேசியர்களைப் பாதுகாக்க உதவும் ஒரு முயற்சியாகும் என்றும் கூறினார்.