அலிபாபா, ஜாக் மா – மலேசியா, மூன்று ஆசிய நாடுகளுக்கு 2 மில்லியன் முகமூடிகளை நன்கொடை

ஜாக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை ஆகியவை மலேசியா மற்றும் மூன்று ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்க அறிவிக்கின்றன.

நேற்று ஒரு அறிக்கையில், ஜாக் மா அறக்கட்டளை 2 மில்லியன் வாய்-மூக்கு கவசங்களையும், 150,000 டெஸ்ட் கிட்களையும், 200,000 பாதுகாப்பு உடைகளையும், 20,000 முகக் கவசங்களையும் அந்த நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறியது.

இந்த அறக்கட்டளை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் அரசாங்கங்களைத் தொடர்புகொண்டு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

“அந்த நாடுகளில் கோவிட்-19 கிருமியை எதிர்த்துப் போராடுவதே அறக்கட்டளையின் குறிக்கோள்”.

“எங்கள் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து கோவிட்-19 நோயை எதிர்த்து போராட நாங்கள் பணியாற்றி வருகிறோம். மற்ற ஆசிய நாடுகளுக்கும் கூடுதல் உதவி அனுப்பப்படும்! மீண்டுவா ஆசியா!” என்று ஜாக் மா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் மலேசியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான 900 கோவிட்-19 பாதிப்புகள் உள்ளன. மலேசியாவிலும் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

கோவிட்-19 நோய்த்தொற்றின் திடீர் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த மலேசியாவில் ஒரு பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்திய மூன்றாவது நாள் இன்று.