சிலாங்கூர் தூண்டுதல் தொகுப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு RM200 உதவி
சிலாங்கூர் அரசாங்கம் இன்று அரசு மருத்துவமனை முழுவதும் கோவிட்-19 நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் RM200 ஊக்கத்தொகை மற்றும் உணவு உதவியை அறிவித்துள்ளது.
அதன் மந்திரி புசார் அமிருதின் ஷரி, இது (Pakej Selangor Prihatin) சிலாங்கூர் தூண்டுதல் தொகுப்பில் செயல்படுத்தப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகும் என்றார்.
“சுகாதார ஊழியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதையும், அவர்களில் சிலர் விடுப்பு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள் என்பதையும் மாநில அரசு அங்கீகரிக்கிறது”.
“எனவே, சிலாங்கூர் முழுவதும் மருத்துவமனைகளில் அடையாளம் காணப்பட்ட கடமையில் இருக்கும் 6,000 ஊழியர்களுக்கு RM200 ஊக்கத்தொகை மற்றும் உணவு உதவிக்கு ஒப்புதல் அளித்தது”.
“இந்த உணவு உதவி மார்ச் 31, 2020 வரை தொடரும். இதன் ஒதுக்கீடு RM1.2 மில்லியன்” என்று அவர் இன்று செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
தற்போது சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் பயிலும் 2,500 சிலாங்கூர் மாணவர்களுக்கும் RM200 வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தடை உத்தரவைப் பின்பற்றி பல்கலைக்கழகத்தில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அந்தந்த வளாகங்களில் தங்க வேண்டிய சிலாங்கூர் மாணவர்களுக்கும் குறிப்பாக சிலாங்கூர் பல்கலைக்கழகம் (Unisel), சிலாங்கூர் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக கல்லூரி (Kuis) மற்றும் சிலாங்கூர் மாநில கல்வித் துறைக்கு (Industri Pendidikan Negeri Selangor), மார்ச் 22 முதல் 31 வரை இலவச உணவுத் திட்டம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
நேற்று, சுகாதார அமைச்சகம் 110 புதிய கோவிட்-19 பாதிப்புக்ளை அறிவித்தது. இது மொத்த எண்ணிக்கையை 900 ஆக உயர்த்தியுள்ளது.
சிலாங்கூரில் 223 பாதிப்புகள் என அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இந்த தூண்டுதல் தொகுப்பில், வியாபாரிகள் மற்றும் உரிமம் பெற்ற வணிகர்களுக்கும் உதவி வழங்கப்படுகிறது. ஆதாரத்தை இழக்கும் சுமையை எளிதாக்க 80,000 உரிமம் பெற்ற வணிகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வாடகை விலக்கு வழங்கப்படும்.
“அவர்களின் பணப்புழக்கத்தை தொடர RM500 சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் ஹிஜ்ரா திட்ட தொழில் முனைவோர் (Hijrah Selangor) மற்றும் ஸ்மார்ட் வாடகை திட்டத்தில் (Skim Smart Sewa) பங்கேற்பாளர்களுக்கும் தவணைத் தொகை செலுத்துவதில் மூன்று மாதத்திற்கு தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
“மக்களின் சுமையை எளிதாக்குவதற்கும் அவர்களின் நிதி துன்பங்களைத் தீர்ப்பதற்கும் மாநில அரசு முயற்சிக்கும்”.
“மாநில நலன்களுக்காக மாநில நிதி செலவினங்களை மேம்படுத்துவதற்கான எந்தவொரு திட்டத்தையும் கேட்க மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது மற்றும் தயாராக உள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, சிலாங்கூரில் கோவிட்-19 அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி அகமட் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக் குழுவை உருவாக்கியது சிலாங்கூர் அரசு.