பொது நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது, அத்தியாவசிய பொருட்களை விற்கும் வியாபாரங்களுக்கான செயல்பாடு நேரங்களை தீர்மானிக்க அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் படில்லா யூசோப் கூறினார்.
இந்த முடிவை உள்ளூர் அரசாங்கத்தின் அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்று படில்லா தெரிவித்தார்.
“அது மாநில அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டது. எந்த நேரத்தில் கடை இயங்க முடியும்: அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள்: இதை முடிவு செய்ய மாநில அரசுக்கு விட்டுவிட்டோம். எந்த நேரத்தில் திறக்க வேண்டும், எந்த நேரத்தில் மூட வேண்டும் என்று முடிவு செய்யப்படும்”.
முன்னதாக, பகாங் அரசாங்கம் இன்று முதல் பல கோவிட்-19 பாதிப்பு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும்
வியாபாரங்களை இரவு 7 மணிக்கு மூட உத்தரவிட்டதாக அறிவித்தது.
சம்பந்தப்பட்ட வியாபாரகளில் 24 மணிநேர பல்பொருள் கடை, உணவகம் மற்றும் பெட்ரோல் நிலையம் ஆகியவை அடங்கும்.
ஒரே ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவார்
இதற்கிடையில், தடை உத்தரவின் போது, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர், அதாவது குடும்பத் தலைவர் மட்டுமே வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படுகிறார்.
இருப்பினும், ஒருவருக்கும் மேற்பட்டர் தேவைப்பட்டால், காவல்துறைக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அது காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு முடிவிற்கும் உட்பட்டிருக்கும்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்.கே.என்) மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையை அறிமுகப்படுத்தியதாக மார்ச் 16 அன்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்தார்.
இந்த 14 நாள் ஆணையின் கீழ், நாட்டின் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவதைத் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் வளாகங்களையும் அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.