கொரோனா வைரஸ் | நாட்டில் கோவிட்-19ல் 6 பேர் இறந்துள்ளனர்.
முன்னதாக, சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இறந்தவர் தப்லீக் சமய கூட்டத்தில் கலந்து கொண்ட 50 வயதான ‘நோயாளி 238’ என்று அடையாளம் காணப்பட்டதாகவும், அவர் மார்ச் 12ம் தேதி மலாக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் என்றும் கூறினார்.
இதற்கிடையில், சரவாக் பேரிடர் மேலாண்மை குழு Sarawak’s disaster management committee பின்னர் 79 மற்றும் 40 வயதுடைய ஒரு தாய் மற்றும் மகள் ஆகிய இருவருமே இறந்துவிட்டதாக அறிவித்தது.
இரண்டு புதிய இறப்புகள் குறித்து சரவாக் பேரிடர் மேலாண்மை குழு கூறுகையில், முதல் மரணம் மார்ச் 18 அன்று நிகழ்ந்தது என்றும், கோலாலம்பூரிலிருந்து ஆய்வக முடிவுகளுக்காக தனியார் மருத்துவமனை காத்திருந்ததால் இந்த மரணத்தைப் புகாரளிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளது.
அக்குடும்பத்தில் இரண்டாவதாக பாதிக்கப்பட்டவர் இன்று மதியம் 1 மணியளவில் இறந்துள்ளார்.
இதற்கிடையில், இன்று நண்பகல் வரை நாட்டில் 153 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இப்பொது மொத்த எண்ணிக்கை 1,183 ஆக உள்ளது.
புதிய பாதிப்புகளில், 90 பாதிப்புகள் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தப்லைட் கூட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.