கொரோனா கிருமி | கோவிட் -19 பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஈரானின் தெஹ்ரானில் இருந்து மலேசிய நாட்டினரை ஏற்றிச் வரும் சிறப்பு விமானம் இன்று அதிகாலை செப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (கே.எல்.ஐ.ஏ) பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.
மலேசிய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பணிக்காக (Humanitarian Assistance and Disaster Relief (HADR)) ஏர் ஏசியா விமானம் 6.35 மணிக்கு தரையிறங்கியதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் இருந்து மலேசிய தூதரகத்தில் பதிவு செய்த குழந்தைகள் உட்பட மொத்தம் 46 நபர்கள் நேற்று இரவு தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட சிறப்பு விமானத்தில் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட அனைவரும் கே.எல்.ஐ.ஏவில் உள்ள வான் பேரழிவு பிரிவில் Air Disaster Unit (ADU) சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.