கோவிட்-19 நோய்த்தொற்றின் சமீபத்திய இறப்பு எண்ணிக்கையை சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அறிவித்துள்ளார்.
“கோவிட்-19 தொடர்பான மேலும் ஒரு புதிய மரணத்தை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் அறிவிப்பதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சமீபத்திய இறப்பு மலேசியாவின் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை இதுவரை ஒன்பது (9) ஆக கொண்டு வந்துள்ளது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
49 வயதான அவர் சுகாதார அமைச்சின் மருத்துவர் ஆவார். அவர் துருக்கிக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்டிருந்தார் என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தகவலை வெளியிட்ட சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த நிலை அவரது வெளிநாட்டு பயணங்களுடன் தொடர்புடையது என்றும் அவர் முன்னணியில் இருந்து பணிபுரியும் மருத்தவரோ அல்லது கோவிட்-19 நோயாளிகளைக் கையாளும் ஊழியரோ இல்லை என்றும், அவர் மேலும் கூறினார்.
“கடுமையான சுவாச நோய்த்தொற்றால் (Severe Acute Respiratory Infection) பாதிக்கப்பட்ட அவர் 17 மார்ச் 2020 அன்று கங்காரின் துவாங்கு பவுசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
“அவர் 18 மார்ச் 2020 அன்று கோவிட்-19க்கு சாதகமாக கண்டறியப்பட்டார். மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர் 19 மார்ச் 2020 முதல் அவருக்கு சுவாச ஆதரவு வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
நூர் ஹிஷாம் கருத்துப்படி, பாதிக்கப்பட்டவர் இன்று காலை 10.33 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவித்தார்.
“அனைத்து MOH உறுப்பினர்களும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
இன்றுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது, அவர்களில் 23 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.
நேற்று மொத்தம் 153 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 1,183 ஆக உயர்த்தியுள்ளது.