கோவிட்-19: இஸ்லாம் வங்கி ஊழியர் பாதிக்கப்பட்டுள்ளார்

மெனாரா பேன்க் இஸ்லாம்-மை (Menara Bank Islam) தளமாகக் கொண்ட அதன் ஊழியர்களில் ஒருவர் கோவிட் -19க்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மலேசிய இஸ்லாம் வங்கி (Bank Islam Malaysia Bhd) தெரிவித்துள்ளது.

அந்த ஊழியர் மற்றும் அவரது நெருங்கிய குடும்பத்தினர்கள், மார்ச் 19 முதல் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று தலைமை நிர்வாக அதிகாரி முகமட் முஅஸாம் முகமட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வங்கி இன்று மெனாரா பேன்க் இஸ்லாம் ஒரு முழுமையான கிருமி நீக்க துப்புரவு பணியை செய்துள்ளது.

“ஊழியருடன் நேரடி தொடர்பு கொண்டிருந்த நபர்களை அடையாளம் காணவும் தெரிவிக்கவும் வங்கி தொடர்பு தடங்களை மேற்கொண்டுள்ளது. மேலும் அவர்களை மருத்துவ பரிசோதனை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியது,” என்று அவர் கூறினார்.

மெனாரா பேன்க் இஸ்லாமின் வழக்கமான சேவைக்கு எந்தவிதமான இடையூறும் இல்லை என்றும், இதுபோன்ற நிகழ்வுகளால் அதன் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு விவேகமான வணிக தொடர்ச்சி திட்டத்தை இந்த குழு கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“பாதிப்பு தொடக்கத்திலிருந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வும் வங்கியால் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளன. கிருமி நீக்கப் பணிகளைத் தொடர்ந்து எங்கள் வளாகங்கள் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளன என்பதை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.