நாட்டில் மற்றொரு கோவிட்-19 மரணம் நிகழ்ந்துள்ளது.
இம்முறை கோலாலம்பூரின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (Hospital Canselor Tuanku Muhriz HCTM) தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) 70 வயது நபர் இறந்துள்ளார்.
மார்ச் 18 அன்று இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த நபர் இப்போது இறந்துவிட்டதாக எச்.சி.டி.எம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் கொண்ட அந்நோயாளிக்கு நிலை மோசமடைந்த பிறகு சுவாச உதவி தேவைப்பட்டது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.
இந்த இறப்பு தொடர்பான மேல் அறிக்கைகளை சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது அறிக்கையில் வெளியிடுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவும் காலை 11.40 மணியளவில் இந்த 11வது மரணத்தை உறுதிப்படுத்தினார்.
இறந்தவர் நீண்டகால நோயின் வரலாற்றைக் கொண்டிருந்தார் என்றும் பிப்ரவரி 2020இல் இந்தோனேசியாவுக்குச் சென்ற வரலாறும் அவருக்கு உண்டு என்று அவர் கூறினார்.
“இறந்தவர் தனது பகுதியில் உள்ள சூராவின் தலைவராக இருந்ததாக சுகாதார அமைச்சகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினர் என்று நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.
“அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது, நேற்று இரவு 9.05 மணிக்கு அவர் காலமானார்,” என்று அவர் கூறினார்.
நேற்று பிற்பகல் நிலவரப்படி, மொத்தம் 1,306 கோவிட் -19 பாதிப்புகள் MOH ஆல் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 22 நோயாளிகள் தற்போது ஐ.சி.யுவில் உள்ளனர் மற்றும் அவர்களுக்கு சுவாச உதவி வழங்கப்படுகிறது என்று அறியப்படுகிறது.