பொது நடமாட்ட கட்டுப்பாடு ஆணை தொடருமா? மார்ச் 30 அன்று முடிவு தெரியும்

பொது நடமாட்ட கட்டுப்பாடு தொடருமா என்பதை தீர்மானிக்க மார்ச் 30க்கு முன்னர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (Majlis Keselamatan Negara) கூட்டப்படும் என்று பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்துள்ளார்.

“இதைத் தொடரும் முன்பு, MOH மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா, சுகாதார பரிசோதனைக்கு தப்லீக் குழுவின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கிறதா மற்றும் கோவிட்-19 புள்ளிவிவரங்கள் குறைவாக இருக்கிறதா, என்று எல்லாவற்றையும் ஆராய வேண்டும்.

“[…] மார்ச் 30க்கு முன்னர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த உத்தரவு போதுமானதா அல்லது இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அதை நீட்டிப்பதா என்று விவாதிக்கும்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கோவிட்-19 பாதிப்பு பரவுவதைக் குறைக்க மார்ச் 18 முதல் மார்ச் 30 வரை பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவுகளை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.