2008 நெருக்கடி போன்ற மந்தநிலை உலகத்தை தாக்கும் – அனைத்துலக நாணய நிதியம் (International Monetary Fund) கணிப்பு

கோவிட்-19 பாதிப்பு 2020ஆம் ஆண்டில் உலகளாவிய மந்தநிலையை ஏற்படுத்தும் என்றும் அதன் விளைவுகள் 12 ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய நிதி நெருக்கடிக்கு ஒத்ததாக இருக்கும் என்றும் அனைத்துலக நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது என்று ஸ்பட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி கணிப்பு வீழ்ச்சியையே காட்டுகிறது என்று அனைத்துலக நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார்.

“2020 மந்தநிலையின் பாதகமான விளைவுகள், நிதி நெருக்கடிக்கு ஒத்ததாகவோ அல்லது அதற்கும் மோசமாகவோ இருக்கும், ஆனால் அது 2021க்குள் மீண்டுவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.