கார்டேனியா பேக்கரீஸ் (Gardenia Bakeries (KL) Sdn Bhd) நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தும் போது வழக்கம்போல அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்டுகள்) மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கு தினசரி விநியோகங்களைத் தொடர்கிறது.
இன்று ஒரு அறிக்கையில், அந்த நன்கு அறியப்பட்ட ரொட்டி உற்பத்தியாளர் அதன் பயனீட்டாளர்களை அமைதியாக இருக்கவும், அவர்களின் தினசரி தேவைகளுக்கு ஏற்பவாறு மட்டுமே வாங்கவும் கேட்டுக்கொண்டது
“கார்டேனியா உங்களுடன் இணைந்து உள்ளது. நாங்கள் எங்கள் சிறந்ததைச் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்கள் பயனீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உற்பத்தியை அதிகரிக்க 24/7 வேலை செய்கிறோம்.
“உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. மேலும் தகவலுக்கு, [email protected]மில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்” என்று அது கூறியது.
சந்தையில் அதன் பொருள் விநியோகத்தை அதிகரிக்க முடியாது என்று அந்த ரொட்டி தயாரிப்பாளர் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று வெளிப்படுத்தினார்.
அதன் தொழிற்சாலைகள் ஏற்கனவே அவற்றின் அதிகபட்ச உற்பத்தி வரம்பை எட்டியுள்ளன என்று அதன் பேஸ்புக் கருத்துப் பிரிவில் வெளியிடப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், கார்டேனியா கூறியுள்ளது.
நகரத்தில் உள்ள பல பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் (convenience stores) கார்டேனியா மட்டுமல்லாமல் பிற நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரொட்டிகள், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தியதிலிருந்து அதி வேகமாக விற்பனையாகின்றன.