இந்தியாவில் இருந்து 189 மலேசியர்கள் நாடு திரும்பினர்

இந்தியாவில் இருந்து 189 மலேசியர்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு ஏர் ஏசியா விமானத்தில் நாடு திரும்பினர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து விமானப் பயணம் நிறுத்தப்பட்டதால் இந்தியாவில் சிக்கியிருந்த மலேசிய குடிமக்களை வெளியேற்றுவதன் ஒரு பகுதியாக அவர்கள் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டனர்.

திருச்சிராப்பள்ளியில் இருந்து திட்டமிடப்பட்ட மற்றொரு ஏர் ஏசியா விமானம் “எதிர்பாராத சூழ்நிலை காரணமாக” இந்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை என்று சென்னையில் மலேசியாவின் துணைத் தூதர் கே. சரவணன் தெரிவித்தார்.

1,726 மலேசியர்கள் அங்குள்ளதாக திங்களன்று தூதரகத்தில் பட்டியலிடப்பட்டனர்.

“தூதரகம் நிலைமையைக் கண்காணித்து வருகிறது. இரு அரசாங்கங்களும் அவர்களுக்கு உதவுவதற்காக விரைவாக செயல்படுகின்றன என்பதை சக குடிமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்” என்று சரவணன் பெர்னாமாவிடம் கூறினார்.

சுமார் 400 மலேசியர்கள் புதுடில்லியில் உள்ள மலேசிய உயர் தூதரகத்துடன் (Malaysian High Commission in New Delhi) தொடர்பில் உள்ளனர். மேலும் மலேசிய விமானங்களை இந்திய அரசு அனுமதிக்கும்போது அவர்கள் வெளியேறலாம் என்று நம்புகிறார்கள்.

செவ்வாயன்று சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்ட 189 பேரில் மூன்று குழந்தைகளும் அடங்குவர்.

மார்ச் 18 முதல் ஐந்து சிறப்பு விமானங்களில் இந்தியாவை விட்டு வெளியேறிய மலேசியர்களின் எண்ணிக்கை 699 ஆகும்.

  • பெர்னாமா