வாய் மற்றும் மூக்கு கவசங்கள் – ‘கட்டாயம்’ அல்ல, ஆனால் ‘ஊக்குவிக்கப்படுகின்றன’

கோலாலம்பூர் நகராட்சி மன்றம் (Dewan Bandaraya Kuala Lumpur (DBKL)) தனது அதிகார எல்லைக்குட்பட்ட பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் பொது / தனியார் சந்தைகளுக்கு வரும்போது பொதுமக்கள் வாய் மற்றும் மூக்கு கவசங்களை (face masks) அணிய வேண்டும் என்று தனது உத்தரவை இப்போது மாற்றியுள்ளது.

DBKL-இன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு புதிய உத்தரவு, வளாகத்தில் இருக்கும்போது மக்கள் வாய் மற்றும் மூக்கு கவசங்களை அணிய “ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளது.

கூடுதலாக, DBKL வளாகத்திற்கு வருபவர்களை சானிட்டைசர் அல்லது கிருமிநாசினிகளைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை அமல்படுத்தும்போது சமூக கூடல் இடைவெளியை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு வழிகாட்டும் வகையில் மார்ச் 22 அன்று DBKL ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்பொருள் அங்காடிகள், மளிகை மற்றும் உணவு விற்பனை நிலையங்கள் வாய் மற்றும் மூக்கு கவசங்களை அணியாத வாடிக்கையாளர்களை வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டனர். ஆனால், நாட்டில் போதுமான வாய் மற்றும் மூக்கு கவசங்கள் இல்லாத நிலையில், இதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

வாய் மற்றும் மூக்கு முகமூடிகளைப் பயன்படுத்துவது குறித்து மார்ச் 22 தேதியிட்ட சுகாதார அமைச்சின் ஆலோசனையுடன் DBKL உத்தரவும் ஒத்தவில்லை.

MOH-இன் படி, இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மட்டுமே வாய் மற்றும் மூக்கு கவசங்களை அணிய வேண்டும்.

சுகாதார இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 எதிர்த்து போராடுவதற்கு முன்னணியில் பணியாற்றுவோர் வாய் மற்றும் மூக்கு முகமூடிகளை அணிவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.