தெற்கு தாய்லாந்தில் சிக்கித் தவிக்கும் மொத்தம் 144 மலேசியர்கள் இன்று நாட்டுக்கு அனுப்பப்படுவதாக மலேசியாவின் துணைத் தூதரகம் முகமட் ரிட்ஜுவான் அபு யாசித் தெரிவித்தார்.
தாய்லாந்து ஒத்துழைப்புடன், மலேசியர்கள் அனைவரும் தாய்லாந்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சிக்கித் தவித்தவர்களில் போண்டோக் பள்ளிகளின் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்குள்ள குடும்ப உறுப்பினர்களை சந்திக்கச் சென்றவர்கள் பலரும் உள்ளனர்.
“சுங்கை கோலோக்-ரன்தாவ் பஞ்சாங் வழியாக செல்லும் குழுவிற்கு, இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை (உள்ளூர் நேரம்) நேரத்தை நிர்ணயித்துள்ளனர். சடாவோ-புக்கிட் கயு ஹித்தாம் பாதை வழியாகச் செல்லுபவர்கள், மலேசியர்களுக்கு எல்லையைக் கடக்க இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை நேரம் நிர்ணயித்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
மலேசியர்களை திருப்பி அனுப்ப உதவிய உள்ளூர் அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
கோவிட்-19 பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, மார்ச் 23 அன்று, தாய்லாந்து அரசாங்கம் மலேசியாவுடனான தனது ஒன்பது எல்லை சோதனைச் சாவடிகளையும் மூடியது.
லாவோஸ், கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற பிற அண்டை நாடுகளுடனான அனைத்து எல்லைகளையும் அரசாங்கம் மூடியுள்ளது.
இந்த காலகட்டத்தில், அனைத்து தாய் மற்றும் வெளிநாட்டினரும் எந்தவொரு எல்லை நுழைவாயில்கள் வழியாக தாய்லாந்தை விட்டு வெளியேறவோ அல்லது நுழையவோ அனுமதிக்கப்படுவதில்லை.
மலேசியாவின் எல்லையில் உள்ள ஒரே ஒரு நிலம் அல்லது கடல் எல்லை சோதனைச் சாவடி மட்டுமே பொருட்களின் இயக்கத்திற்கு திறக்கப்படும்.