35 வயதான மலேசியர் நேற்று இரவு கோவிட்-19 நோய்வாய்ப்பட்டதால் மரணமுற்றுள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 24 ஆக உயர்ந்துள்ளது.
‘நோயாளி 1,056’ என்று அடையாளங்காணப்பட்ட அந்நபர் மார்ச் தொடக்கத்தில் இந்தோனேசியாவுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்டிருந்தனர் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இறந்த அந்நோயாளி மார்ச் 18 அன்று கோலாலம்பூர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சுகாதார அமைச்சு அவரின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டது.
நேற்றைய நிலவரப்படி, நாட்டில் கோவிட்-19 பாதிப்படைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2,031 உள்ளன.
இதில் நாற்பத்தைந்து நோயாளிகள் ஐ.சி.யுவில் உள்ளனர்; 32 பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது; 215 குணமடைந்துள்ளனர்.
கடினமான நிலைக்கு சுகாதார அமைச்சகம் தயாராகி வருவதாகவும், 33 மருத்துவமனைகளில் 3,000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.