நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட வேண்டும் – MIER

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு ஏப்ரல் 28 வரை நீட்டிக்கப்பட வேண்டும் – MIER

கோவிட்-19 நாட்டில் பூஜ்ஜியமாக இருப்பதை உறுதிசெய்ய ஏப்ரல் 28 வரை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் மற்றொரு நீட்டிப்பை பரிந்துரைக்கிறது மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (The Malaysian Institute of Economic Research (MIER)).

MIER இன்று ட்விட்டரில் ஒரு முறையான அறிக்கையில் இந்த பரிந்துரையை வழங்கியது. இந்த ஆண்டு மார்ச் தேதியிட்ட தொற்றுநோய்க்கான நிறுவனத்தின் பகுப்பாய்வு நகலின் நகலும் அதில் அடங்கி இருந்தது.

ஏப்ரல் 4 ஆம் தேதி அதாவது நடமாட்டக் கட்டுப்பாடின் 18வது நாளில் புதிய நோயாளிகளின் அதிகரிப்பு தொடர்ந்து 435 நோயாளிகள் என்ற உச்சத்திற்கு உயரும் என்ற கணிப்பின் அடிப்படையில் ஏப்ரல் 28 வரை நடமாட்டக் கட்டுப்பாடை நீட்டிக்க அவர்கள் முன்மொழிகின்றனர் என்று MIER தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 12 ஆம் தேதி அதாவது நடமாட்டக் கட்டுப்பாடின் 6வது நாளில் பாதிப்புகள் அதிகரித்து 5,070 உச்சநிலையை எட்டக்கூடும் என்றும், அதிகபட்ச ஒட்டுமொத்த பாதிப்பு 8,957ஆகவும் இருக்கும் என்று MIER கூறியுள்ளது.

“இதன் அடிப்படையில், ஏப்ரல் 14 வரை உள்ள நடமாட்டக் கட்டுப்பாடை மேலும் குறைந்தபட்ச 14 நாள் காலம் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகாததை அனுமதிக்கும்.

அல்லது தொடர்ச்சியான பூஜ்ஜிய பாதிப்பை உறுதிப்படுத்த கூடுதல் 14 நாட்கள் சேர்த்து ஏப்ரல் 28 வரை அதிகபட்சம் 29 நாட்கள் இருக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.