ஏப்ரல் முதல் பி40, எம்40-க்கான RM10 பில்லியன் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்

கோவிட்-19 நெருக்கடியைக் கருத்தில் கொண்டு குறைந்த வருமானம் கொண்ட பி40 மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட எம்40 குழுக்களுக்கு பிரதம மந்திரி முகிதீன் யாசின் மொத்தம் சுமார் 10 பில்லியன் ரிங்கிட் ரொக்க தொகையை அறிவித்துள்ளார்.

மாதத்திற்கு RM4,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்கள் மொத்தம் RM1,600 பெறும் என்று அவர் கூறினார். அதில் RM1,000 ஏப்ரல் மாதத்திலும், மீதம் மே மாதத்திலும் செலுத்தப்படும்.

RM4,000 முதல் RM8,000 வரை சம்பாதிக்கும் குடும்பங்கள் RM1,000 பெறும். அதில் RM500 ஏப்ரல் மாதத்திலும், மீதம் மே மாதத்திலும் செலுத்தப்படும்.

ஒரு மாதத்திற்கு 2,000க்கும் குறைவாக சம்பாதிக்கும் ஒற்றை நபர்களுக்கு (single individuals) RM800 கிடைக்கும் என்றும் முகிதீன் கூறினார் (ஏப்ரல் மாதத்தில் RM500 மற்றும் மே மாதத்தில் RM300).

பிரதமரின் கூற்றுப்படி, ஒரு மாதத்திற்கு RM2,000க்கும் அதிகமாக சம்பாதிக்கும் ஒற்றை நபர்களுக்கு (single individuals) RM500 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் RM250 ஏப்ரல் மாதத்திலும் மற்றொரு RM250 மே மாதத்திலும் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.