கொரோனா வைரஸ் சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும்.
இந்த மாத தொடக்கத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மலேசியர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், நாட்டில் கோவிட்-19 பாதிப்புகளின் ‘சுனாமியை’ சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது.
இப்போது அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் முயற்சிகளில் ஒரு பகுதியாகும் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
பல மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுமுறைக்காக ஜப்பான் மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இத்தாலி மற்றும் ஈரான் நாடுகளுக்கு அடுத்தபடியாக கோவிட்-19க்கு அதிக ஆபத்து இருப்பதாக அடையாளம் காணப்பட்ட நாடுகளில் இந்நாடுகள் இருக்கின்றன.
ஒரு அமைச்சு தன் 8,000 ஊழியர்களுக்கு வெளிநாடுகளுக்கு விடுமுறைக்கு செல்ல ஒப்புதல் அளித்ததையும் அவர் வெளிப்படுத்தினார்.