கோவிட்-19 பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தணிக்கும் ஊக்கத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பாதிப்பினால் மலேசியர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டிலேயே இருக்கும்படியான சூல்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் முகிதீன் யாசின் நேற்று மொத்தம் RM250 பில்லியன் மதிப்புள்ள ஒரு தூண்டுதல் தொகுப்பை அறிவித்தார். இதில், முன்னால் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிப்ரவரி 27 அன்று வெளியிட்ட RM20 பில்லியன் பொருளாதார தூண்டுதல் தொகுப்பும் அடங்கும்.
இந்த தூண்டுதல் தொகுப்பைப் பற்றி ஒரு பார்வை, அது எவ்வாறு நிதியளிக்கப்படும் என்பதை ஆராய்வோம்.
அரசாங்கம் RM250 பில்லியனை செலவிடுகிறது என்று அர்த்தமா?
இல்லை. பண உதவி மட்டுமல்லாமல், இதில் கடன்கள் (loans), கடன் செலுத்துதல் ஒத்திவைப்புகள் (loan payment deferments) மற்றும் வாடகை தள்ளுபடிகள் (rental waivers) ஆகியவை அடங்கி உள்ளது.
பண உதவி மற்றும் SME கடன்கள், ஒத்திவைக்கப்பட்ட கடன்கள் மற்றும் தனிநபர்கள் மற்றும் வணிகர்களால் சேமிக்கப்பட்ட பணம் ஆகியவை செலவழிக்கப்பட்டு பொருளாதார மந்தநிலையைத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த நுகர்வு (consumption) மற்றும் நுகர்வோர் செலவினங்களை (consumer spending) மேம்படுத்த ஒரு பெருக்கி விளைவை (multiplier effect) உருவாக்குவது இதன் யோசனை.
உதாரணமாக, அத்தியாவசியமற்ற தொழில்துறையில் உள்ள ஒரு தொழிற்சாலை ஊழியர் சம்பளம் இல்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்ள பணிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு கொடுக்கப்பட்ட பண உதவியை கொண்டு ஒரு சிறிய உள்ளூர் மளிகைக் கடையில் பணத்தை செலவழிக்க முடியும். இதனால் அந்த கடை உரிமையாளருக்கு தேவையான மூலதனம் கிடைத்து, அவர் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பொருள்களை வாங்க உதவும். மொத்த விற்பனையாளர்கள் இப்போது தொழிற்சாலைகளிலிருந்து பொருள்களை வாங்குவார்கள். தொழிற்சாலைகள் மூலப்பொருட்களை சப்ளையர்களிடமிருந்து பெறுகின்றன.
அரசாங்கம் உண்மையில் எவ்வளவு செலவு செய்கிறது?
பிரதமர் முகிதீன் யாசின் கருத்துப்படி, நேரடி நிதி (fiscal injection) RM25 பில்லியன் ஆகும். பிப்ரவரி 28 அன்று அப்போதைய இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்த தூண்டுதல் தொகுப்பும் இதில் அடங்கும்.
“நேரடி நிதி” (“direct fiscal injection”) என்றால் என்ன?
அரசாங்கத்திடமிருந்து பணம். இதில் ஊதிய மானியங்கள் (wage subsidies), பண உதவி (ஒரு தடவை செலுத்தல்) (one-off cash payments), முன்னணி சுகாதார ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் இ-ஹெயிலிங் (e-hailing) ஓட்டுனர்களுக்கான பண உதவி ஆகியவை அடங்கும்.
2020 பட்ஜெட்டுக்கான அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட செலவு RM297 பில்லியன் ஆகும். இந்த தூண்டுதல் தொகுப்பு (RM25 பில்லியன்) நிதி பற்றாக்குறையை விரிவுபடுத்துமா?
அநேகமாக இருக்கலாம். 2020ஆம் ஆண்டிற்கான அரசாங்க வருவாய் (வரி, நில பிரீமியம் மற்றும் மறைமுக வரி போன்றவை) வீழ்ச்சி மிகவும் கடுமையானதாக இருக்காது என்று நம்புகிறோம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் GDP ஒப்பிடும்போது தூண்டுதல் தொகுப்பு எவ்வளவு பெரியது?
2019ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி RM1.51 டிரில்லியன் என்று புள்ளிவிவரத் துறையின் கணக்கீட்டின் அடிப்படையில் இந்த பதில் இருக்கும்.
அதாவது இந்த முழு தூண்டுதல் தொகுப்பும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.5 சதவீதத்தை எட்டும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால், வழங்கப்பட்ட அனைத்து கடன்களும் எடுக்கப்படமாட்டாது. ஊக்கத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது போல் ஊழியர் சேம நிதியத்திலிருந்து (EPF) எல்லோரும் பணத்தை எடுக்க மாட்டார்கள்.
பண உதவி பெறுபவர்கள் பணத்தை செலவழிப்பதற்குப் பதிலாக சேமித்து வைத்தால், அது பொருளாதாரத்திற்கு உதவாது.
பிரதமர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா?
ஆம், மத்திய அரசியலமைப்பின் 101வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். நடைமுறையில், அரசாங்கம் முதலில் செலவழித்து, பின்னர் ஒரு துணை மசோதாவை (Supplementary Supply Bill) தாக்கல் செய்யும்.
சிங்கப்பூர் தனது தூண்டுதல் திட்டத்தை முதலில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு செய்தது. விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இதேபோல், அமெரிக்காவின் தூண்டுதல் திட்டம் கீழ் சபையால் (காங்கிரஸ்) நிறைவேற்றப்பட்டு, மேல் சபை (செனட்) ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், முகிதீனின் தூண்டுதல் திட்டத்தைப் பாராட்டும் அதே வேளையில், அது முதலில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுள்ளார்.