நடமாட்டக் கட்டுப்பாடு: கடுமையான நடவடிக்கைகள் நாளை அறிவிக்கப்படும்

கொரோனா வைரஸ் | தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) சில வணிகங்கள் மற்றும் சேவைகளை மூடவும் அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் செயல்படும்படி பரிந்துரைத்துள்ளது. ஆனால் இதை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பு இது முறையாக இருக்குமாறு உறுதிசெய்யப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறுகிறார்.

“பல இடங்கள் மூடப்பட வேண்டும் அல்லது அவற்றின் செயல்பாட்டு நேரம் குறைவாக இருக்க வேண்டும் என்று என்.எஸ்.சி. பரிந்துரைத்துள்ளது, ஆனால் இது மற்ற அமைச்சகங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.” என்று கோவிட்-19 தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். .

“எடுத்துக்காட்டாக, தொழில்களைப் பொறுத்தவரை, மூடலுக்கான பட்டியல் உள்ளன, ஆனால் அவைகளை அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்துடன் நாங்கள் விவாதிக்க வேண்டும்” என்று இஸ்மாயில் கூறினார்.

“அதேபோல், காய்கறி உற்பத்தி தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஆனால் இதனால், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி கடைகளும் திறந்து இருக்க வேண்டும். இது பல தொழில்களை திறந்திருக்க சாத்தியமாகிவிடும்.

“நாங்கள் எந்த கடுமையான முடிவை எடுத்தாலும், அது மக்களுக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்று அவர் கூறினார். மேலும், கடுமையான வழிமுறைகள் நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் அறிவிக்கப்படும் என்றார்.

சூப்பர்மார்க்கெட்டுகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் செயல்பாட்டு நேரங்களுடன் திறந்திருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நடமாட்டக் கட்டுப்பாடை கடினப்படுத்துவது, தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 1988இன் கீழ் இருக்கும் என்றும் எனவே, இது ஊரடங்கு உத்தரவு அல்லது அவசரநிலை இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

“பீதி ஏற்படுகின்ற போலி செய்திகளால் பாதிக்கப்பட வேண்டாம்” என்று அவர் கூறினார்.

கடுமையான நடவடிக்கைகள் நாளை அறிவிக்கப்படும் என்று இஸ்மாயில் கூறினார்.