முன்னதாக கோவிட்-19 அறிகுறிகள் இல்லாத 5,084 பேர் பரிசோதனைக்கு முன்வருமாறு சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்த குழுவைக் கண்டுபிடிக்க அமைச்சகம் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார்.
இந்த குழு செரி பெட்டாலிங் மசூதியில் நடந்த தப்லீக் நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் அல்லது நெருங்கிய தொடர்புகள் என அடையாளங்காணப்பட்டுள்ளது.
“இந்த 5,084 பேரை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் இன்னும் சோதிக்கப்படவில்லை.”
“எங்கள் கிளினிக்குகளுக்கு வர அவர்களை ஊக்குவிப்பதற்காக நாங்கள் காவல்துறையினருடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், பின்னர் நாங்கள் அவர்களை சோதனை செய்வோம்,” என்று அவர் கூறினார்.
“நாங்கள் அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்போம், மேலும் அவர்கள் சோதனை செய்ய முன்வருவார்கள் என நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
பொது சுகாதார வசதிகளில் கோவிட்-19 சோதனைகள் இலவசமாக நடத்தப்படுகிறது.