கோவிட்-19: 3 வகையான மருந்துகள்

குளோரோகுயின் (Klorokuin), ஹைட்ரோகுளோரோடோகுயின் (Hidroksiklorokuin) மற்றும் லோபினாவிர் / ரிடோனாவிர் (Lopinavir/Ritonavir) சேர்க்கை மருந்து ஆகிய தற்போது பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளை கோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம்.

இந்த மூன்று வகையான மருந்துகளும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஃபாவிபிராவிர் (Favipiravir) மற்றும் ரெம்டெசிவிர் (Remdesivir) (ஆன்டிவைரல் மருந்துகள்) போன்றவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய மருந்துகள், கோவிட்-19 சிகிச்சையில் பயன்படுத்த எப்போதும் MOH ஆல் வசதி செய்யப்படும் என்றார்.

“ரெம்டெசிவிர் (Remdesivir) ஆய்வு மருந்துகளை பொருத்தவரை, அம்மருந்தின் பயன்பாட்டுக்கான மருத்துவ ஆய்வில் (Multicenter Adaptive Solidarity trial – Covid-19’) பங்கேற்க மலேசியாவை தேர்வு செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO).

“இந்த மருத்துவ ஆய்வு தயாரிப்பை விரைவில் மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு மலேசியா வழியை வழங்கும். அதே நேரத்தில் ஃபாவிபிராவிர் (Favipiravir) மருந்துக்காக, சுகாதார அமைச்சு வினியோகிப்பாளர்களிடமிருந்து மருந்துகளை பெற முயற்சிக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய கோவிட்-19 தொற்று சூழ்நிலையில், தற்போதுள்ள மருந்துகளுக்கான பதிவாளர்களிடமிருந்து வழங்கல் போதுமானதாக இல்லாமல் போனால், இயக்குநர் ஜெனரலின் சிறப்பு ஒப்புதல் சட்ட விதிகளின் விலக்கைப் பயன்படுத்தி பதிவு செய்யப்படாத தயாரிப்புகளின் மாற்றுப் பொருட்களை MOH இன்னும் பெற முடியும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

நோயாளிகளின் நலனுக்காக மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் உறுதி செய்ய சுகாதார அமைச்சு தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளும். இது பதிவுசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மருந்துகளின் தர கண்காணிப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.