கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக மலேசியா மேலும் இரண்டு இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 65 ஆகி உள்ளது.
இன்று ஒரு ஊடக மாநாட்டில், சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 166 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், இன்றுவரை மொத்தம் 1,487 நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இது மொத்த பாதிப்புகளில் 36.1 சதவீதமாகும்.
இன்று பிற்பகல் வரை மொத்தம் 156 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 4,119 ஆகும்.
45 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். மொத்தம் 76 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.