23 நாட்களுக்குப் பிறகும், மீறல்கள் இன்னும் உயர்ந்து கொண்டே இருக்கிறன

இன்று, COVID-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு செயல்படுத்தப்படும் 23வது நாள். ஆனால் உத்தரவு முடிவுக்கு வருவதற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், அதனை மீறும் வழக்கு புள்ளிவிவரங்கள் அதிகரிப்பைக் காட்டும்போது கவலைகள் எழுந்துள்ளன.

உண்மையில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தில் உறவினர் வீடுகளுக்குச் செல்வது போன்ற தடைசெய்யப்பட்ட இயக்க நடவடிக்கைகள் இன்னும் உள்ளன என்று குறிப்பிட்டார்.

சாலையில் வாகனங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.

மூத்த (பாதுகாப்பு) அமைச்சர் டத்தோ செரி இஸ்மாயில் சப்ரி யாகோப், இதுவரை உத்தரவை மீறிய நபர்களின் கைது, செவ்வாயன்று 13 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றார். செவ்வாய்க்கிழமை மட்டுமே 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது திங்களன்று 403 பேருடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளன.

கூடுதலாக, COVID-19 சிவப்பு மண்டல பகுதிகளும் நாடு முழுவதும் 23 இடங்களாக அதிகரித்துள்ளன. சரவாக்கில் உள்ள கோத்தா சமரஹான் மற்றும் சிலாங்கூரில் உள்ள செப்பாங் மாவட்டங்கள் செவ்வாயன்று 41க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்த பிறகு, சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இன்றுவரை, சிம்பாங் ரெங்கம் (ஜொகூர்), ஹுலு லங்காட் (சிலாங்கூர்) மற்றும் கோலாலம்பூரில் மூன்று கட்டிடங்கள், அதாவது மெனாரா சிட்டி ஓன், சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மலையன் மேன்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு இடங்கள் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சில மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான COVID-19 நேர்மறை பாதிப்புகளை பதிவு செய்துள்ளன. அவை, சிலாங்கூர் (1,078 வழக்குகள்), கோலாலம்பூர் (685 வழக்குகள்) மற்றும் ஜொகூர் (496 வழக்குகள்) ஆகும்.

நிலைமையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்த செவ்வாய்க்கிழமை முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால், நாட்டில் COVID-19 நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு இணங்க வேண்டியது ஒட்டுமொத்த மக்களின் பொறுப்பாகும்.