கோவிட்-19: 109 புதிய நோய்த்தொற்றுகள், 2 இறப்புகள், 121 பேர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் 109 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 4,228-ஆக கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

121 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இது மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 1,608-ஆக அல்லது மொத்த பாதிப்புகளில் 38 சதவீதமாகக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக இரண்டாவது நாள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை புதிய தொற்றுநோய்களை விட அதிகமாயுள்ளன.

இதற்கிடையில், நூர் ஹிஷாம் இரண்டு புதிய இறப்புகளையும் அறிவித்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை மொத்தம் 67-ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் உள்ளவர்களில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யு.) கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 72 ஆக உள்ளது; இது நேற்று 76 ஆக இருந்தது.

ஐ.சி.யுவில் உள்ள கோவிட்-19 நோயாளிகளில் 43 பேர் வென்டிலேட்டர்களில் உள்ளனர், இது நேற்று 45 ஆக இருந்தது.