23 வயதான பெண் ஒருவர் கோவிட்-19 பாதிப்பில் இறந்த இளையவர் என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, அந்த மலேசியப் பெண், தைராய்டு நோயின் வரலாற்றைக் கொண்ட ‘2864 நோயாளி’ ஆவார். இவர் கூச்சிங் சரவாக் தேவாலய கூட்டத்துடன் தொடர்புடையவர்.
பிப்ரவரி 27 முதல் 29 வரை நடைபெற்ற Good News Fellowship கூட்டத்தில் அந்தப் பெண் கலந்து கொள்ளவில்லை என்று நூர் ஹிஷாம் கூறினார்.
“அக்கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளுடன் (பாதிப்பு 2,469 மற்றும் 2,470) நெருங்கிய தொடர்பு கொண்ட வரலாற்றைக் கொண்டிருந்தார்.
“அவர் மார்ச் 30 அன்று சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இன்று காலை 9.42 மணியளவில் அவர் இறந்துவிட்டார்” என்று இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.