கோவிட்-19: 220 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இன்று 118 புதிய பாதிப்புகள்

குணமடைந்து வரும் கோவிட்-19 நோயாளிகள் இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளனர்.

இன்று 118 புதிய பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, 220 பேர் குணமாகியுள்ளதாக பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்தார்.

இதுவரை குணமடைந்துள்ள மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,830, அல்லது மொத்த 4,346 நோயாளிகளில் 43 சதவீதம்.

அடுத்த இரண்டு வாரங்களில், புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால், கோவிட்-19இன் பரவலைக் குறைக்க முடியும் என்று அவர் நம்புவதாக கூறினார்.

இருப்பினும், அந்த இலக்கை அடைய, ஏப்ரல் 28 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.