மத்திய மலாக்கா இப்போது கோவிட்-19 இன் சிவப்பு மண்டலமாக உள்ளது

மத்திய மலாக்கா மாவட்டம் (Melaka Tengah) கோவிட்-19 சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் சமூக ஊடகங்கள் மூலம் இன்று பகிரப்பட்ட விளக்கப்படத்தின் படி, அம்மாவட்டத்தில் 44 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கோலாலம்பூரின் லெம்பா பந்தாய், 427 பாதிப்புகளுடன் அதிக கோவிட்-19 நேர்மறை பாதிப்பு பகுதியாக உள்ளது. சிலாங்கூரில் ஹூலு லங்காட் மற்றும் பெட்டாலிங்கில் முறையே 368 மற்றும் 328 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சரவாக்கின் கூச்சிங்கில், 209 பாதிப்புகள் உள்ளன.

சிலாங்கூரில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் அதாவது சுமார் 1,148 பாதிப்புகள் உள்ளன. லாபுவானில் மிகக் குறைவான பாதிப்புகளே (13) உள்ளன.

மலேசியா முழுவதுமான சிவப்பு மண்டல பகுதிகளின் முழு பட்டியல் இங்கே.

பேராக்:

ஹீலிர் பேராக் 66

கிந்தா 97

சிலாங்கூர்:

செப்பாங் 59

பெட்டாலிங் 328

ஹூலு லங்காட் 368

கோம்பாக் 123

கிள்ளான் 159

ஹூலு சிலாங்கூர் 44

கோலாலம்பூர்:

செரஸ் 64

கெப்போங் 114

லெம்பா பந்தாய் 427

தீத்திவாங்சா 106

புத்ராஜெயா: 49

நெகேரி செம்பிலன்:

சிரம்பான் 197

ரெம்பாவ் 52

மலாக்கா:

ஜாசின் 61

மத்திய மலாக்கா 44

பகாங்:

குவாந்தான் 53

ஜெராண்டுட் 63

ஜோகூர்:

பத்து பாகாட் 50

குளுவாங் 176

ஜோகூர் பாரு 171

கிளந்தான்:

கோத்தா பாரு 86

சரவாக்:

கூச்சிங் 209

கோத்தா சமரஹான் 46

சபா:

தவாவ் 67

மொத்தம்: 3,279 பாதிப்புகள்