கிளந்தான் சட்டசபை 45 நிமிடங்களுக்கு கூடியது

கிளந்தான் மாநில சட்டசபை இன்று கோத்தா பாருவில் உள்ள டாருல் நைம் வளாகத்தில் 45 நிமிடங்களுக்கு கூடியது.

மார்ச் 23 முதல் 26 வரையிலான அதன் அசல் தேதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்ட பின்னர், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் இன்று மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு வெளி அழைப்பிதழ் இன்றி தொடங்கிய இந்த மாநாட்டில் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தவிர்க்க முடியாத காரணத்தால் மாநில சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா முகமது கலந்து கொள்ளவில்லை.

மாநாடு தொடங்குவதற்கு முன், மக்களின் பிரதிநிதிகள் தங்கள் உடல் வெப்பநிலையை சோதித்தனர். மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்பு கைத்தூய்மியை பயன்படுத்தினர்.

இந்த மாநாடு இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றியது – RUU Undang-Undang Taman Negara pindaan 1938 மற்றும் RUU Kerabat Bergelar dan Datuk Bergelar.

மூன்று நாட்கள் நீடிக்க வேண்டிய அமர்வு, சுருக்கப்பட்டு 45 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 45 நிமிடங்கள் மட்டுமே ஆனாலும், அது சீராக நடந்ததற்காக கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர் அப்துல்லா தனது நன்றியைத் தெரிவித்தார்.

“நாங்கள் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றி, எந்த வெளி அழைப்பும் இல்லாமல் சபையை சுருக்கமாக நடத்தியுள்ளோம்”.

“எழுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் சுல்தானின் உத்தரவு ஆகியவை அடுத்த மாநாட்டில் விவாதிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.