நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது ரமலான் சந்தைகள் இயங்க அனுமதி இல்லை

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நாடு முழுவதும் ரமலான் சந்தைகளை நடத்த அரசாங்கம் அனுமதிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மக்கள், வல்லுநர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்ட பிரதமர் முகிதீன் யாசினின் மூன்று முடிவுகளில் இந்த விவகாரமும் உள்ளது என்றார்.

“இந்த முடிவுகள் அனைத்தும் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையிலும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKM) மற்றும் காவல்துறை (PDRM) ஆகியவற்றின் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டவை” என்று இஸ்மாயில் கூறினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 28 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.