லிம் குவான் எங் மீது கொலை மிரட்டல், போலீஸ் விசாரனை

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் ஒரு வாட்ஸ்அப் குழுவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக லிம், தாபோங் ஹஜிக்கு சொந்தமான நான்கு தங்கும் விடுதிகளை, ஊருஸ்ஹர்த்தா ஜமா (Urusharta Jamaah Sdn Bhd) என்ற நிதி அமைச்சின் சிறப்பு நோக்க நிறுவனத்திற்கு (SPV) விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டை பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சர் முஜாஹித் யூசோப் மறுத்துள்ளார். தாபோங் ஹஜி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு மத விவகார அமைச்சரே பொறுப்பு என்றும், நிதி அமைச்சர் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மார்ச் 18 அன்று லிம்-க்கு அனுப்பிய கடிதத்தில், KPN-ன் தலைமை சட்ட அதிகாரி முகமட் அஸ்மான் அகமது சப்ரி, குற்றவாளி, “Skuad cari Pasal” குழுவை சார்ந்தவர் என்றுள்ளார்.

“இந்த வழக்கு Seksyen 4 (1) Akta Hasutan 1948 மற்றும் Seksyen 233 Akta Komunikasi dan Multimedia ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது” என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கை குற்றவியல் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் முகமட் ஹனீப் அப்துல் ஹனீப் விசாரித்து வருவதாக முகமட் அஸ்மான் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 18 அன்று தாபோங் ஹஜி சொத்துக்களை விற்றதாக குற்றம்சாட்டி, லிம் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக “ஜிகான் டோரி” என்ற முகநூல் பக்கத்தை வைத்திருக்கும் நோர் ஜிகான் முகமட் டோரி (47 வயது) என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 (1)(a)-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

அந்நபர் கோலாலம்பூரில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்து, RM6,000 போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.