தேசிய நீர் சேவை ஆணையத்தின் Suruhanjaya Perkhidmatan Air Nasional (SPAN) தலைவராக சார்லஸ் சாண்டியாகோவின் சேவை நிறுத்தப்பட்டது.
மற்ற அனைத்து ஆணையர்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டன என்று டிஏபி எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ கூறினார்.
அவரின் பதவி நீக்கம், ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். ஆனால் சுற்றுச் சூழல் அமைச்சர் இப்ராஹிம் மான் கையெழுத்திட்ட கடிதம் இன்று தான் கிடைத்தது என்று அவர் கூறினார்.
“இது ஒரு நல்ல வேலையை இழப்பதைப் பற்றியது அல்ல, ஆனால் கடந்த பதினெட்டு மாதங்களாக போடப்பட்டுள்ள கடின உழைப்பு அனைத்தும் வீணாகக்கூடும் என்ற ஆழ்ந்த கவலை தான் மேலோங்கி உள்ளது என்பதை என்னை அறிந்த எவரும் புரிந்துகொள்வார்கள்”, என்றார்.